கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுகிறதா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கிறிஸ்தவ மிஷனரிஸ், கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுகிறதா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுகிறதா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
x
பாலியல் புகாரால் பணி நீக்கம் செய்யப்பட்ட சாமுவேல் என்ற பேராசிரியர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மனுவை தள்ளுபடி செய்ததோடு, கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டார். கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து பெற்றோர் மத்தியில் நிலவுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.  

நல்ல கல்வியை வழங்கினாலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா என்பது, மில்லியன் டாலர் கேள்வி எனவும், நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்கவும், அப்பாவி ஆண்களை பாதுகாக்கும் வகையிலும் சட்டத் திருத்தம் கொண்டு வருவது குறித்து அரசு சிந்திக்க வேண்டிய தருணம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்