விநாயகர் சிலை கரைப்பதற்கான வழிமுறைகள்

செப்டம்பர் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், சிலையை கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை கரைப்பதற்கான வழிமுறைகள்
x
செப்டம்பர் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், சிலையை கரைப்பதற்கான வழிமுறைகளை  தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நீரில் கரையும் தன்மையுடன் இயற்கை வர்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை மக்கள் உபயோகிக்க வேண்டும் என்றும் களிமண், சுடப்படாத கிழங்கு மாவு, ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவு போன்றவற்றால் தயாரான விநாயகர் சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ரசாயன வர்ணம் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி இல்லை என்றும் மாசு கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளின் படி, மாவட்ட நிர்வாகம் குறிப்பிடும் இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை பாதிக்காத வண்ணம் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுமாறும் மக்களை கேட்டுக் கொண்டுள்ள தமிழக அரசு,  கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளரை அணுகுமாறு அறிவுறுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்