"ஓட்டுநர் உரிமம் இல்லாத மாணவர்களை கவனிக்க வேண்டும்" - அமைச்சர் செங்கோட்டையன்

ஓட்டுநர் உரிமம் இல்லாத மாணவர்களை கவனிப்பது பள்ளிக் கல்வித் துறையின் வேலை இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஓட்டுநர் உரிமம் இல்லாத மாணவர்களை கவனிக்க வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்
x
ஓட்டுநர் உரிமம் இல்லாத மாணவர்களை கவனிப்பது பள்ளிக் கல்வித் துறையின் வேலை இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்கள், அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்று மட்டுமே உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார். இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கவில்லை என்ற செங்கோட்டையன், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் மாணவர்களை கவனிக்க வேண்டியது, வட்டார போக்குவரத்து அலுவலர்களின் வேலை என்றார். 

Next Story

மேலும் செய்திகள்