காஞ்சிபுரத்தில் அத்திரவரதர் உற்சவம் நிறைவு - நள்ளிரவிலும் கொட்டும் மழையில் தரிசித்த பக்தர்கள்
காஞ்சிபுரத்தில் அத்திரவரதர் உற்சவம் இன்றுடன் முடிவடையும் நிலையில் நேற்று நள்ளிரவு வரை கொட்டும் மழையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த 48 நாட்களாக கோலாகலமாக நடைபெற்று வந்தது. சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், கடந்த ஒன்றாம் தேதி முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்தார்.. அத்திவரதர் தரிசனத்தின் நிறைவு நாளான நேற்று பொதுமக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் மஞ்சள், ரோஸ் நிற பட்டாடையில், மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின் காட்சியளித்த அத்திவரதரை அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். நள்ளிரவு வரை கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கானர் அத்திவரதரை தரிசித்தனர். கூட்டத்தை பொருட்படுத்தாமல் கடைசியாக அத்திவரதரை காணவேண்டும் என்ற ஆவலில் பக்தர்கள் ஓடோடி சென்று வழிபட்டனர். நள்ளிரவில் ஆந்திர பக்தர்கள் பஜனையுடன் வரதராஜபெருமாள் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் முடப்பட்டது.
அனந்த சரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறார் அத்திவரதர்
ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்களால் தரிசிக்கப்பட்ட அத்திவரதர் இன்று காலை 6 கால பூஜைகள் செய்யப்பட்டு அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்படுகிறார். இனி அத்திவரதரை வரும் 2059 ஆண்டுதான் பக்தர்கள் தரிசிக்க முடியும். கடந்த 48 நாட்களாக அத்திவரதர் உற்சவம் நடைபெற்றதால் காஞ்சிபுரமே விழாக்கோலம்பூண்டிருந்தது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகள் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Next Story