அத்திவரதர் வைபவம்: சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு

அத்திவரதர் வைபவம் வெகு விமரிசையாக நடப்பதற்கு உதவிய அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
அத்திவரதர் வைபவம்: சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு
x
அத்திவரதர் வைபவம் வெகு விமரிசையாக நடப்பதற்கு உதவிய அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் விரிவான பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல வசதிகளை செய்து கொடுத்ததன் காரணமாக இந்தியா முழுவதிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்,

இரவு பகல் பாராமல் அயராது உழைத்த அனைத்து துறையினர் குறிப்பாக மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை, காவல் துறை, உள்ளாட்சி துறையினருக்கு தனது மனமார்ந்த நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்