நெல்லை காவல் ஆணையராக இருந்த பாஸ்கரன் இடமாற்றம்

நெல்லை காவல் ஆணையர் பாஸ்கரன் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை காவல் ஆணையராக இருந்த பாஸ்கரன் இடமாற்றம்
x
நெல்லை காவல் ஆணையர் பாஸ்கரன் சென்னைக்கு இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் ஆபரேசன் ஐ.ஜி ஆக பாஸ்கரன் இடமாற்றம் செய்யப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகர புதிய காவல் ஆணையராக எம். தாமோர் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு விசாரணை அதிகாரி டிஎஸ்பி அனில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய விசாரணை அதிகாரியாக ரூபன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே பெரம்பலுார் காவல் கண்காணிப்பாளராக நிஷா பார்த்திபன், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திஷா மிட்டலும்  நியமிக்கபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்