அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
அத்திவரதரை 48 நாட்களுக்கு பின் மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என எந்த ஆகம விதியும் இல்லை என்பதால் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என, தென் இந்திய ஹிந்து மகா சபா மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டன.இந்த வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அத்திவரதர் சிலை கோவில் ஆகம விதிப்படி 48 நாட்களுக்கு பின் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறது எனவும், இந்த நடைமுறையை மாற்ற முடியாது எனவும் தெரிவித்தார். இது குறித்து அரசை மனுதாரர் நிர்பந்திக்க முடியாது எனவும் தெரிவித்தார்.தொடர்ந்து, 48 நாட்கள் மட்டுமே அத்திவரதர் தரிசனத்தை நடத்த வேண்டும் என்பதற்கு ஆதாரமாக கல்வெட்டு புகைப்படத்தையும்  அரசு தாக்கல் செய்தது.அரசுத்தரப்பு வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதிகள், கோவில் மரபு, வழிபாட்டு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், தரிசனத்தை நீட்டிப்பது தொடர்பாக கோவில் நிர்வாகமும், அரசும் தான் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி மனுக்களை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்