தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் : ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்வு

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில், 320 ரூபாய் வரை விலை உயர்வை கண்டுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் : ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்வு
x
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், நேற்று 400 ரூபாய் வரை விலை குறைந்து காணப்பட்டது.  இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 320 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 28 ஆயிரத்து 944 க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 618 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. முன்னதாக தங்கத்தின் விலை 29 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை ஆன நிலையில், விலை ஏற்றம் தொடரும் என்று வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர். சர்வதேச அளவில் உலக நாடுகளில் வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதாகவும், தங்க இறக்குமதிக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 12 புள்ளி 5 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் ஆபரன தங்கம் விலை உயர்ந்து வருவதாகவும் வர்த்தகர்கள் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்