சைதாப்பேட்டை ஆற்றில் குதித்த நபர் உயிருடன் மீட்பு

சைதாப்பேட்டை ஆற்றில் குதித்த நபரை அப்பகுதி இளைஞர்கள் உயிருடன் மீட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சைதாப்பேட்டை ஆற்றில் குதித்த நபர் உயிருடன் மீட்பு
x
சென்னை சைதாப்பேட்டை ஆற்றில் குதித்த நபரை அப்பகுதி இளைஞர்கள் உயிருடன் மீட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஈரோட்டை சேர்ந்த, ரவிக்குமார், இன்று காலை சைதாப்பேட்டை  ஆற்றின் மேல் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது ரயில் வரவே, பயந்த போன ரவிக்குமார், ஆற்றில் குதித்துள்ளார். அதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் அவரை மீட்டு கரைக்கு தூக்கி வந்தனர். இதன் வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்