கல்லணை கால்வாய் ஆற்றில் அவசர கதியில் பணிகள் நடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

கல்லணை கால்வாய் ஆற்றல் உடைப்பு ஏற்பட்ட நிலையில் ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி அவசர கதியில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
x
கடந்த ஆண்டு கல்லணை கால்வாய் ஆற்றல் உடைப்பு ஏற்பட்ட நிலையில் ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி அவசர கதியில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் 2 நாட்களுக்கு முன்பு தான் உடைப்பை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் சில நாட்களுக்குள் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்து சேரும் என்பதால் அவசர கதியில் பணிகள் நடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். எனவே கூடுதல் கவனம் செலுத்தி கல்லணை கால்வாய் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்