அத்திவரதரை தரிசித்த பிறகு பெண்ணுக்கு பிரசவ வலி - அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண்

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்துவிட்டு வெளியே வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
அத்திவரதரை தரிசித்த பிறகு பெண்ணுக்கு பிரசவ வலி - அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண்
x
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்துவிட்டு வெளியே வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 16 கால் மண்டபத்தில் உள்ள மருத்துவ முகாமிற்கு அந்த பெண் அழைத்து செல்லப்பட்டார். அங்கு 3 கிலோ எடையில் அழகான ஆண் குழந்தையை அந்த பெண் பெற்றெடுத்தார். விசாரணையில் நெமிலி பாணாவரம் பகுதியை சேர்ந்த அசோக்குமாரின் மனைவி விமலா என்பது தெரியவந்தது. சுகப்பிரசவத்திற்கு பிறகு, தாய்- சேய் இருவரும் மேல்சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்