தங்கத்தின் விலை இன்று திடீர் சரிவு

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியிருந்த நிலையில் இன்று சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை இன்று திடீர் சரிவு
x
உலக சந்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 29 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது தங்கத்தின் விலை இன்று திடீரென கிராமுக்கு 51 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 3 ஆயிரத்து 576 ஆக குறைந்தது. சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 28 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் 60 காசுகள் குறைந்து 47 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையாகிறது. 

Next Story

மேலும் செய்திகள்