கிளிப் பச்சை நிறப்பட்டு அலங்காரத்தில் அத்திவரதர்...

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 44வது நாளான இன்று, கிளிப் பச்சை நிற பட்டு அலங்காரத்தில் அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார்.
x
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் உற்சவம், காஞ்சிபுரத்தில் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 31ஆம் தேதி வரை சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், கடந்த ஒன்றாம் தேதி முதல் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிற பட்டு அலங்காரத்தில் அத்திவரதர் காட்சி தரும் நிலையில், 44வது நாளான இன்று, கிளிப்பச்சை நிற பட்டாடையில் காட்சி தந்து வருகிறார். அத்திவரதர் மலர் பதக்கம், பச்சை கிளிகள், பஞ்சவண்ண மாலை அணிந்து காலை 5 மணி முதலே பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். நள்ளிரவு முதலே லட்சக்கணக்கான மக்கள் சுமார் 8 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து, அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். அத்திவரதர் உற்சவம் நிறைவடையை இன்னும் 4 நாட்களே உள்ளது. அதிலும், பக்தர்களுக்கான தரிசனம் நிறைவடைய இன்னும் 3 நாட்களே உள்ளது. இந்நிலையில் அலைமோதி வரும் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி, உணவு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்