"3 ஆண்டுகளுக்கு புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க தடை" - அகில இந்திய பார் கவுன்சில் கூட்டத்தில் முடிவு

அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க இந்திய பார்கவுன்சில் தடை விதித்துள்ளது.
3 ஆண்டுகளுக்கு புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க தடை - அகில இந்திய பார் கவுன்சில் கூட்டத்தில் முடிவு
x
இந்திய பார்கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் சுமார் ஆயிரத்து 500 சட்டக்கல்லூரிகள் உள்ளதாகவும், ஆனால் பல சட்டக்கல்லூரிகளில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும்  தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சட்டக்கல்வியின் தரம் குறைந்து வருவதாகவும் கூறப்பட்டது. எனவே அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்க தடை விதிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தேசிய சட்டபல்கலைக்கழகம் இல்லாத ஒரு மாநிலத்தில் புதிய சட்டபல்கலைக்கழகம் அமைக்க அந்த மாநிலம் முன்வந்தால் இந்த தடை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்