காஷ்மீர் விவகாரத்திற்கு ஆதரவளிப்பதா? - ரஜினிக்கு கே.எஸ் அழகிரி கண்டனம்

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்திற்கு ஆதரவளிப்பதா? - ரஜினிக்கு கே.எஸ் அழகிரி கண்டனம்
x
ஆன்மிக உணர்வை மத உணர்வு என்று நடிகர் ரஜினிகாந்த் தவறாக புரிந்து கொண்டிருப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜம்மு- காஷ்மீரை போல ஏழு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து இருப்பதை சுட்டிக் காட்டியுள்ள கே.எஸ்.அழகிரி, அந்த மாநிலங்களின் சிறப்பு அந்தஸ்தை நீக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மோடியையும் அமித்ஷாவையும் கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனர் என பாராட்டும் ரஜினிகாந்த், மகாபாரதத்தை திரும்ப திரும்ப சரியாக படித்து பார்க்க வேண்டும் என்றும் அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்