உணர்வுபூர்வமாக பேசப்பட்ட வார்த்தைகளை பெரிதுபடுத்த வேண்டாம் - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

அத்தி வரதர் வைபவத்தில், ஒரு காவல் அதிகாரியை மாவட்ட ஆட்சியர் கண்டிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
x
அத்தி வரதர் வைபவத்தில், ஒரு காவல் அதிகாரியை  மாவட்ட ஆட்சியர் கண்டிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா, உணர்வுபூர்வமாக பேசப்பட்ட வார்த்தைகளை பெரிதுபடுத்த வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளார். பாதுகாப்பு பணியில், காவலர்கள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றனர் என்றும், நாங்கள் ஒரே குடும்பமாகச் செயல்படுகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். பணிகள் சரியாக நடக்க வேண்டும் என்பதால் சில விஷயங்களில் கண்டிக்கக் கூடிய சூழல் உள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்