பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அதிகரிப்பு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம எட்டையபுரம் ஆட்டு சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆனது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அதிகரிப்பு
x
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம எட்டையபுரம் ஆட்டு சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆனது. சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விலை போனது. விற்பனை ஆரம்பித்த சில மணி நேரங்களில் 90 சதவீத ஆடுகள் விற்பனை ஆனது. இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர்.

பக்ரீத் பண்டிகை - ஆடுகள் விற்பனை அதிகரிப்பு



பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி சமயபுரம் ஆட்டுச்சந்தையில் சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆனது. பக்ரீத் பண்டிகை வரும் 12-ம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சமயபுரம் சந்தைக்கு அதிக ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஆந்திராவிலிருந்து மங்களாபுரி புதுரக ஆடுகளும்  விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதனை இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்