குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து... சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
x
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், கடந்த சில நாட்களாக  கன மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அருவிகளில் குளிக்க விதிக்கப்படிருந்த தடை, வெள்ளப்பெருக்கு குறைந்ததால், இன்று காலை 10 மணி முதல் விலக்கி கொள்ளப்பட்டது. எனினும் சுற்றுலா பயணிகளில் வருகை குறைவாகவே காணப்படுகிறது. இதனால் படகு சவாரியும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில்  தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்