குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...

நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
x
நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குற்றால சீசன் தாமதமாக தொடங்கி நிலையில், அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குற்றாலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால், அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்  என்று காவல்துறையினர் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்