'அத்திகிரி' புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர்

காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள கூடுதல் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
x
காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள கூடுதல் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும், அரசு உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். முன்னதாக, அத்தி வரதரின் சிறப்பு, வழிபடும் முறை குறித்து தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் என மும்மொழிகளில் தயாரிக்கப்பட்ட 'அத்திகிரி' புத்தகத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்