உச்சத்தை தொட்ட தங்கம் விலை...

தங்கம் விலை சமீபத்தில் இல்லாத வகையில் சவரன் 28 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
x
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 568 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 352 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 3 ஆயிரத்து 544 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 473  ரூபாயாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 71 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ஆயிரத்து 900 ரூபாய் வரை விலை உயர்வை கண்டுள்ளது. பங்குச் சந்தைகள் தொடந்து  சரிவைக் கண்டுவரும் நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக தங்க நகை வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
  

Next Story

மேலும் செய்திகள்