நலிவடைந்து வரும் கைத்தறி தொழிலை பாதுகாக்க நெசவாளர்கள் கோரிக்கை

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
தேசிய கைத்தறி தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், கைத்தறி தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கைத்தறி ஆடைகள் பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை எனவும், விசைத்தறியில் தயாரிக்கப்படும் துணிகள், கைத்தறி ஆடைகள் என சந்தையில் விற்கப்படுவது அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். போதிய வருமானம் இல்லாததால் பரம்பரை பரம்பரையாக கைத்தறி தொழில் செய்து வருபவர்களின் வாரிசுகள், வேறு தொழிலுக்கு மாறி வருவதாகவும், கைத்தறியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்டுத்தி உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்