"மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்தவர், கருணாநிதி " - இந்து என்.ராம்

புத்தக வெளியீட்டு விழாவில், "இந்து" என். ராம் புகழாரம்
x
" தி இந்து " குழுமத்தின் ஃ பிரண்ட்லைன் இதழ் தயாரித்துள்ள கருணாநிதியின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்த " ஒரு மனிதன் - ஒரு இயக்கம்" என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை - பாரிமுனையில் உள்ள அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, இந்நூலை வெளியிட, முதல் பிரதியை " தி இந்து " குழுமத்தின் தலைவர் என். ராம் மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி இருவரும் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இந்து என். ராம்,  மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்தவர், கருணாநிதி என புகழாரம் சூட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்