அக்.15ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் அக்டோபர் பதினைந்தாம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
அக்.15ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு  பணிகளை வரும்  16-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ந் தேதி வரை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.இதனால் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியிடுவதற்கு பதிலாக அக்டோபர் மாதம் பதினைந்தாம்  தேதி வெளியிடப்படும் என்றும் வாக்காளர் விவரங்களுடன் அவர்களின் செல்போன்,  மின்னஞ்சல் முகவரி இணைக்கப்படும் என்றும் , வாக்காளர் அட்டையில் புகைப்படம் , முகவரி மாற்றம்  உள்ளிட்ட திருத்தங்களை வாக்காளர் முகாமில் மேற்கொள்ளலாம் என்றும்  வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள  பிரத்யேக செயலியை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளதாகவும் அவர் கூறினார். நவம்பரில் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தி,  வரும் 2020  ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்