"தனியார் கல்லூரிகள் காலியாக உள்ளதற்கு எதுவும் செய்யமுடியாது" - அமைச்சர் கே.பி.அன்பழகன்

பொறியியல் படிப்பில் கடந்த ஆண்டைவிட கூடுதல் மாணவர்கள், சேர்ந்துள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியுள்ளார்.
தனியார் கல்லூரிகள் காலியாக உள்ளதற்கு எதுவும் செய்யமுடியாது - அமைச்சர் கே.பி.அன்பழகன்
x
பொறியியல் படிப்பில் கடந்த ஆண்டைவிட கூடுதல் மாணவர்கள், சேர்ந்துள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியுள்ளார். சென்னை தரமணியில் பி.ஆர்க். படிப்பிற்கான கலந்தாய்வை இன்று துவக்கி வைத்த அவர், சுயநிதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு அந்தக் கல்லூரிகளே பொறுப்பு என்றார். அதற்கு அரசு ஏதும் செய்ய முடியாது என்ற அன்பழகன், கல்லூரிகளை நடத்தும் அளவுக்கு மாணவர்கள் இருந்தால் அனுமதி வழங்கப்படும், இல்லாவிட்டால் மறுக்கப்படும் என்று கூறினார். பேராசிரியர்கள் பற்றாக்குறை, அரசு பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகள் மூலம் பணி நிரவல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்