ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை எதிர்த்து போராட்டம் : மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி கண்டனம்

ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
x
ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில், ராஜாஜிசாலையில் போராட்டம் நடைபெற்றது. மத்திய மற்றும் மாநில அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர். பின்னர் பேசிய அக்கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய அரசின் முடிவு கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைக்கும் செயல் எனக் குற்றம்சாட்டினார்

Next Story

மேலும் செய்திகள்