"கைத்தறி ஆடைகளை அதிகளவில் வாங்கி பயன்படுத்துங்கள்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் கைத்தறி துணிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெசவாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார். கைத்தறி துணிகளை சந்தைப்படுத்துதல், தொழிலை ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றுக்காக கைத்தறி ஆதரவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். எனவே, கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் தமிழக மக்கள் கைத்தறி ரகங்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்தவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story