ரத்து செய்யப்பட்ட காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 : 370வது சட்டப்பிரிவை உருவாக்கிய தமிழர்...

ஜம்மு காஷ்மீருக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ உருவாக்கியதில் தமிழர் ஒருவர் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.
ரத்து செய்யப்பட்ட காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 : 370வது சட்டப்பிரிவை உருவாக்கிய தமிழர்...
x
காஷ்மீரின் சிறப்பு சட்டப்பிரிவான 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சட்டப்பிரிவை உருவாக்கியவர், தமிழ்நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்த கோபால்சாமி அய்யங்கார். ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது, காஷ்மீர் ஆட்சி பொறுப்பில் ஷேக் அப்துல்லா இருந்தார். அப்போது காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் அளிக்க வேண்டும் என்ற ஷேக் அப்துல்லாவின் கோரிக்கையை நேரு அதற்காக இந்த சிறப்பு சட்டத்தை உருவாக்க அம்பேத்கரிடம் பிரதமர் நேரு கேட்டுக்கொண்டார். ஆனால் அம்பேத்கர் மறுத்துவிட்டதால், அந்த பணி கோபாலசாமி அய்யங்காருக்கு ஒதுக்கப்பட்டது. தஞ்சையை சேர்ந்த கோபால்சாமி அய்யங்கார், துறை ஒதுக்கப்படாத மத்திய அமைச்சராக இருந்த இவர் காஷ்மீர் விவகாரங்களை கையாண்டு வந்தார். கோபாலசாமி அய்யங்கார் உருவாக்கிய இந்த 370வது சட்டப்பிரிவு, அப்போதைய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்தால் அனுமதி அளிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்