உரிமம் இல்லாமல் பைக் ஓட்டி விபத்து : பிளஸ் 2 மாணவருக்கு நீதிமன்றம் வினோத தண்டனை

பொள்ளாச்சி அருகே ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய அரசுபள்ளி மாணவனுக்கு நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கியது.
உரிமம் இல்லாமல் பைக் ஓட்டி விபத்து : பிளஸ் 2 மாணவருக்கு நீதிமன்றம் வினோத தண்டனை
x
கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியி்ல் பிளஸ் 2 படித்துவரும் ரோஹித், கடந்த ஆண்டு, தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் நடந்து சென்றவர் மீது மோதினார். இதில் மணிகண்டன் என்பவரின் கால் உடைந்தது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வண்டியை ஓட்டிய மாணவன் ரோஹித் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரனை கோவையில் உள்ள இளஞ்சிறார் சீர்திருத்த நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 
போக்குவரத்துக் காவலருடன் இணைந்து, 10  நாட்களுக்கு தினம்தோறும் மாலை 3 மணி நேரம் போக்குவரத்தை சரி செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, போக்குவரத்தை சீரமைக்கும்பணியில் மாணவர் ரோஹித் கடந்த 5  நாட்களாக ஈடுபட்டு வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்