"விழிப்புணர்வு ஏற்படுத்தவே பேரிடர் மீட்பு ஒத்திகை" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பேரிடர் மீட்பு குறித்த பயிற்சிகளில், மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக திகழ்வதாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
x
சென்னை தீவுத் திடலில் பேரிடர் மீட்பு துறையினர் பயன்படுத்தும் உபகரணங்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பல அதிநவீன கருவிகள் இடம்பெற்றுள்ள இந்த கண்காட்சியை, பொதுமக்கள் இன்று மாலை வரை, பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காட்சியின் 2ஆம் நாளான இன்று, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பேரிடர் மீட்பு கருவிகளை பார்வையிட்டார். அப்போது ஒவ்வொரு கருவிகளின் செயல்பாடுகள் குறித்தும், அவர் கேட்டறிந்தார். முன்னதாக, சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அவசர கட்டுப்பாட்டு அறையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், பேரிடர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்