சோளிங்கரில் குளத்தில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்

சோளிங்கரில், உள்ள ஒரு குளத்தில் கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் கொட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சோளிங்கரில் குளத்தில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்
x
வேலூர் மாவட்டம் சோளிங்கர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பின்புறம் உள்ள குளத்தில் கட்டுகட்டாக தமிழக அரசால் வழங்கப்படும் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டைகள் கொட்டப்பட்டு இருந்தது. அதேபோல் நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளும் அங்கு வீசப்பட்டு இருந்தது. பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இந்த அடையாள அட்டைகளை வீசிச் சென்றது யார் என விசாரணை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூரில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குளத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்