ஒசூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானை

ஒசூர் அருகே தொளுவபெட்டாவில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானையை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தாய் யானை பத்திரமாக மீட்டு அழைத்து சென்றது.
ஒசூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானை
x
வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை கூட்டம், தொளுவபெட்டாவில் வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்டு உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்து தாகத்தை தணித்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக கூட்டத்தில் இருந்த யானை குட்டி ஒன்று அந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. இதனைத் தொடர்ந்து யானை குட்டி தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தது. தாய் யானை உள்பட மற்ற காட்டு யானைகள் ஒருங்கிணைந்து,  தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டியை மீட்க போராடின ஆனாலும் யானைகளால் குட்டியை மீட்க முடியவில்லை இதுகுறித்து அறிந்த தேன்கனிகோட்டை வனத்துறையினர் காட்டு யானைகள் நின்ற பகுதிக்கு கிராம மக்கள் யாரும் செல்லாதவாறு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து  அங்கு சப்தம் போட்டபடி தாய் யானை கோபத்துடன் சுற்றி சுற்றி வந்தது. காட்டுயானைகள் கூட்டம் அங்கிருந்து சென்றன. ஆனால் தாய் யானை குட்டியின் அருகிலே நின்று கடும் போராட்டத்திற்கு இடையே குட்டி யானையை தொட்டியில் இருந்து மீட்டது. இதனை அடுத்து தாய் யானையும் அதன் குட்டியும் ஆனந்தமாக வனப்பகுதிக்குள் சென்றன.

Next Story

மேலும் செய்திகள்