நெல்லையப்பர் கோவிலில் முளைகட்டும் திருவிழா

நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லையப்பர் கோவிலில் முளைகட்டும் திருவிழா
x
நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டும் திருவிழா நேற்று அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்காக சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு, அதன் பின்னர் காந்திமதி அம்பாளுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு, கண்ணாடி காட்டி நலுங்கு வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் முளை கட்டிய தானியங்களை வைத்து சிறப்பு பூஜை செய்து, அம்பாளுக்கு மடியில் கட்டி பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்