நெல்லையில் ஆடிபெருக்கு விழா : தாமிரபரணி நதிக்கு மகாஆரத்தி

ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு நெல்லை அருகன்குளம் தாமிரபரணி ஜடாயு தீர்த்த படித்துறையில் பரணி ஆரத்தி விழா நடைபெற்றது.
நெல்லையில் ஆடிபெருக்கு விழா : தாமிரபரணி நதிக்கு மகாஆரத்தி
x
ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு நெல்லை அருகன்குளம் தாமிரபரணி ஜடாயு தீர்த்த படித்துறையில் பரணி ஆரத்தி விழா நடைபெற்றது.  இதனை முன்னிட்டு விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு  மஞ்சள்கயிறு குங்குமம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தாமிரபரணியின் உபநதிகளான மணிமுத்தாறு, பச்சையாறு, சிற்றாறு உள்ளிட்ட நதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தாமிரபரணி நதிக்கு பட்டுப்புடவை, வளையல், குங்குமம், மஞ்சள், கண்ணாடி ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டு , மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினார் . பின்னர் பரணி மகா ஆரத்தி காட்டப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்