முரட்டு சிங்கிள்களுக்கு 50% சலுகை தரும் வித்தியாச உணவகம்...

காதலில் சிக்காமல் சிங்கிளாக இருக்கும் இளைஞர்களுக்காகவே சலுகை விலையில் உணவு வழங்கி வருகிறது மயிலாடுதுறையில் ஒரு உணவகம்...
x
காதலில் சிக்காமல் இருக்கும் இளைஞர்கள் முரட்டு சிங்கிள் என கெத்தாக கூறுவது இப்போது வழக்கமான நடைமுறையாக உள்ளது. ஆனால் இவர்களுக்காகவே மயிலாடுதுறையில் ஒரு உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. கால்டாக்ஸ் பகுதியில் இயங்கி வரும் இந்த உணவகத்தில் சிங்கிளாக வருவோருக்காகவே தனியாக ஒரே ஒரு இருக்கை மட்டும் உள்ளது. மேலும் இவர்களுக்கு உணவில் 50 சதவீதம் சிறப்பு சலுகை என்பதும் கூடுதல் சிறப்பு. மேலும் உணவகத்தின் மற்றொரு பக்கத்தில் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வடிவமைப்பு செய்திருக்கிறார்கள். மொத்தத்தில் இளைஞர்கள் பலரையும் கவரும் வகையில் இந்த உணவகம் இயங்கி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்