தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு : கிராமுக்கு ரூ.33 உயர்வு, சவரனுக்கு ரூ.264 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்ததை தொடர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு : கிராமுக்கு ரூ.33 உயர்வு, சவரனுக்கு ரூ.264 உயர்வு
x
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 33 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 416 ரூபாயாகவும், சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்து 27 ஆயிரத்து 328 ரூபாயாகவும் உள்ளது. இரண்டு நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 848 ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து 44 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, சர்வதேச சந்தையில் தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களே ஆபரணத்தங்கத்தின் விலை உயர காரணமாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 Next Story

மேலும் செய்திகள்