தொண்டை அடைப்பான் நோய் - 6 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி...

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்ட 6 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
x
லால்குடியை அடுத்த இடையாற்று மங்கலத்தை சேர்ந்த காவியா, சுஷ்மிதா, தனுஷ் உள்ளிட்ட 6 பேர் தொண்டை வலியால்  பாதிக்கப்பட்டு சிசிக்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொண்டை வலியால் அவதிப்பட்ட இதே பகுதியை சேர்ந்த 10 சிறுவர், சிறுமிகள் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில்  தொண்டையில் பாதிப்பு ஏற்பட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு  அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்