34ஆம் நாள் அத்தி வரதர் உற்சவம் : வரதருக்கு ரோஸ் நிற பட்டாடை அலங்காரம்

காஞ்சிபுரம் அத்தி வரதர் உற்சவத்தின் 34ஆம் நாளான இன்று பெருமாள், இளம் பச்சை கலந்த அடர் ரோஸ் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
x
அதிகாலை 5 மணிக்கு தரிசனம் தொடங்கியது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வரதரை தரிசனம் செய்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆடிப்பூரத்தையொட்டி, வரதராஜபெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற உள்ளதால் தரிசனம் நேரத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை வரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் முடிந்த பிறகு, இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு வரை அத்தி வரதரை தரிசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 44 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்திருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்