போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவிகள் அளித்த புகார் மீது உடனடி நடவடிக்கை

போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, மாணவிகள் அளித்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவிகள் அளித்த புகார் மீது உடனடி நடவடிக்கை
x
போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, மாணவிகள் அளித்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை அருகே உள்ள பீடம் பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட குழந்தைகள் நல அலுவலர்  தீபாவை, சந்தித்த மாணவிகள் சிலர், நடுபாளையத்தை சேர்ந்த வெங்கடேஸ், லட்சுமணன், ராஜன் ஆகியோர் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக தெரிவித்தனர். இது தொடர்பாக தீபா அளித்த புகாரில் நடவடிக்கையில் இறங்கிய சூலூர் போலீசார், வெங்கடேஷை கைது செய்தனர். தலைமறைவான மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்