மாடியில் இருந்து கீழே குதித்து தொழிலதிபர் தற்கொலை...

பிரின்ஸ் கார்டன் தம்புசாமி தெருவை சேர்ந்த தொழிலதிபர் தேவேந்திர டி.மேத்தா .
மாடியில் இருந்து கீழே குதித்து தொழிலதிபர் தற்கொலை...
x
பிரின்ஸ் கார்டன் தம்புசாமி தெருவை சேர்ந்த தொழிலதிபர் தேவேந்திர டி.மேத்தா . இவர் ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி இன்று காலை தனது வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். தலையில் பலத்த அடிபட்ட காரணத்தினால், அவர் உடனடியாக, தனியார் மருத்துவமனைக்கு, அழைத்து செல்லப்பட்டார். அவரை, பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக, அவரது உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலைக்கு முன்பு தொழிலதிபர் மேத்தா எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், தம்முடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்