திருச்சியில் மதுபோதையில் போலீஸ் குறித்து அவதூறு வீடியோ...

திருச்சியில் மதுபோதையில் காவல்துறையினர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர், போலீசாரிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
திருச்சியில் மதுபோதையில் போலீஸ் குறித்து அவதூறு வீடியோ...
x
திருச்சியில் மதுபோதையில் காவல்துறையினர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர், போலீசாரிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி உள்ளது.  திருச்சி மாநகர பகுதிகளில் குற்றச்செயல்களை குறைக்கும் விதமாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் மதுபோதையில் வரும் இளைஞர் ஒருவர், சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை வசைபாடும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது அந்த இளைஞர் போலீசாரடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்