கரும்பச்சை நிறப் பட்டு அலங்காரத்தில் நின்ற கோலத்தில் அத்திவரதர்...

நின்ற கோலத்தின் இரண்டாவது நாளான இன்று, கரும் பச்சை வண்ண பட்டு அலங்காரத்தில் அத்தி வரதர் காட்சி அளித்து வருகிறார்.
x
காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 33 நாளான இன்று, அத்தி வரதர், கரும் பச்சை வண்ண பட்டு உடுத்தி, மல்லிகை, சம்பங்கி, செண்பக  மலர் மாலை அலங்காரத்தில் காட்சி அளித்து வருகிறார். காலை 5 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். ஆடிப்பூரத்தையொட்டி, நாளை ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவதால் மாலை 5 மணிக்குப் பிறகு தரிசனம் நிறுத்தப்பட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரவு 8 மணிக்கு பிறகு மீண்டும் தரிசனம் நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்