"காபி-டே" அதிபர் சித்தார்த்தா தற்கொலை - பின்னணி தகவல்கள்

காபி - டே அதிபர் சித்தார்த்தாவின் தற்கொலை விவகாரத்தின் பின்னணி குறித்த புதிய தகவல்கள், தற்போது வெளியாகி உள்ளன. தனிப்பட்ட முறையில், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடனில் சிக்கி தவித்த சித்தார்த்தாவுக்கு, முக்கிய பிரமுகர் ஒருவர், கடும் நெருக்கடி கொடுத்தது தெரிய வந்துள்ளது.
x
"காபி கிங்" என அழைக்கப்பட்ட காபி- டே அதிபர் சித்தார்தாவின் தற்கொலை விவகாரம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது.  கடன் தொகையை விட, அதிக சொத்து வைத்திருந்த ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வந்த சித்தார்த்தாவின் தற்கொலைக்கான பின்னணி குறித்து, புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவக்குமார் வீ்ட்டில் நடந்த வருமான வரி சோதனையை, தொழிலதிபர் சித்தார்த்தாவின் சிக்கல்களுக்கு ஆரம்ப புள்ளியாக கருதப்படுகிறது. சித்தார்த்தாவின் 20 சதவீத பங்குகளை முடக்கிய வருமான வரித்துறை, வங்கி கணக்குகள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகளையும் இறுக்கியது. இதனால், சித்தார்தா கடும் நிதி நெருக்கடியில் சிக்கி, தவித்து வந்தது உறுதியாகி உள்ளது.

நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, சித்தார்தா, 20 நிமிடங்கள், செல்போனில் பேசி இருக்கிறார். பலரிடம் ஆவேசமாகவும், சிலரிடம் மன்னிப்பு கேட்கும் தொனியிலும் பேசிய சித்தார்தா, 
ஒரு மாதத்திற்கு முன்பே, தற்கொலை முடிவை எடுத்திருந்த புதிய தகவலும் வெளியாகி உள்ளது.

சித்தார்தாவின் செல்போனை கண்டெடுத்த கர்நாடக போலீசார், கடைசியாக அவர் பேசிய 20 பேர் பட்டியலை சேகரித்து, விசாரணையை துவக்கி உள்ளனர். தனிப்பட்ட முறையில் சித்தார்த்தாவுக்கு ஆயிரம் கோடி ரூபாய் முதல் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை கடன் இருக்கும் என தெரிய வந்துள்ளது.

கடன் கொடுத்த முக்கிய பிரமுகர் ஒருவரின் மிரட்டலும், வருமான வரித்துறை யின் கடும் நெருக்கடியும், சித்தார்தாவை தற்கொலை முடிவுக்கு தள்ளி இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையே, சித்தார்தா பெயரில் வெளியான கடிதம், அவரது கையெழுத்து தான் என்பதும் உறுதியாகி உள்ளது. எனவே, காபி-டே அதிபர் சித்தார்தாவின் தற்கொலைக்கான முழு உண்மைகளும், அடுத்தடுத்த நாட்களில், வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்