கரூர் இரட்டை கொலை - 6 பேர் சரண்...

கரூர் மாவட்டம் முதலைபட்டியில் தந்தை - மகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 6 பேர் சரண் அடைந்துள்ளனர்.
x
கரூர் மாவட்டம், முதலைப்பட்டியில் 39 ஏக்கர் ஏரியை 70-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்துள்ளனர். அந்த ஏரியை மீட்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி,  அதிகாரிகள் அங்கு சென்று ஏரியை அளவீடு செய்தனர். அவர்களுக்கு ஆக்கிரமிப்பு பகுதிகளை, அதே பகுதியை சேர்ந்த வீரமலையும், அவரின் மகன் நல்லதம்பியும் அடையாளம் காட்டி உள்ளனர். முன்னதாக, இதுதொடர்பான பொதுநல மனு தொடர்ந்த வழக்கறிஞருக்கும் இருவரும் உதவியாக இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள், வீரமலை மற்றும் நல்லதம்பியை வெட்டிக் கொன்றனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து சிலரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த இரட்டை கொலை தொடர்பாக முதலைப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்ற செளந்தர்ராஜன், பிரபாகரன், கவியரசன், சசிகுமார்  ஸ்டாலின் ஆகியோர் மதுரை 6வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இன்று சரண் அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்