நூல் ஆசிரியர்கள் 13 பேருக்கு நோட்டீஸ் : 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு

தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் தொன்மையானது என பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற விவகாரத்தில், 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க, நூலாசிரியர்கள் 13 பேருக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
x
பனிரெண்டாம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் தமிழ்மொழி கிறிஸ்து பிறப்பதற்கு முன் 300 ஆண்டுகள் பழமையானது என்றும் சமஸ்கிருத மொழி 2,000 ஆண்டுகள் பழமையானது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த செய்தி முதலில் தந்தி தொலைக்காட்சியில் கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பானது. இதையடுத்து அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை  தெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பாடப் புத்தக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்த நிலையில், இது குறித்து 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க, நூலாசிரியர்கள் 13 பேருக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்