வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த புதிய ஓட்டுப்பதிவு இயந்திரத்தை உருவாக்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்

வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்தும் வகையிலான புதிய ஓட்டு பதிவு இயந்திரத்தை சென்னையை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
x
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் படித்து வரும் ஜெபின், ஜெயச்சந்திரன், பிரதீப் குமார் என 3 மாணவர்கள் சேர்ந்து இந்த இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். வாக்குப்பதிவின்போது, வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலான இந்த ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஆதார் மூலம் கைரேகை மற்றும் கண் ரேகைகள் பதிவுகள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளன. ஒரு நபர் எங்கிருந்தாலும், தங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு வாக்கினை பதிவு செய்யும் வகையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், அருகில் உள்ள ஏடிஎம் எந்திரத்தில் இந்த கருவியை பொருத்துவதன் மூலம், ஏடிஎம் இயந்திரத்தில் தங்கள் கைரேகையை வாக்காளர்கள் பதிவிட்டு, தங்கள் தொகுதி வேட்பாளர்களுக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்க முடியும். மாணவர்களின் இந்த முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு தெரிவித்துள்ளதோடு, ஊக்கத்தொகையும் வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாணவர்கள் 3 பேருக்கும் ஊக்கத்தொகையை வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்