செல்போனில் மூழ்கிய குழந்தைகளை மீட்பது எப்படி? - விடை கொடுத்த சிறப்பு கண்காட்சி

செல்போனில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளை களிமண்ணால் கூட மாற்ற முடியும் என்பதை உணர்த்த நடைபெற்ற கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
செல்போனில் மூழ்கிய குழந்தைகளை மீட்பது எப்படி? - விடை கொடுத்த சிறப்பு கண்காட்சி
x
குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக அவர்கள், கையில் செல்போன் கொடுக்கும் நிலை உள்ளது. இதனால் செல்போன் பயன்படுத்த துவங்கும் குழந்தைகள் வளர்ந்ததும், அதற்குள்ளே, மூழ்கி, விளையாட்டு, படிப்பை கோட்டை விடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.இவ்வகை, குழந்தைகளை, மீட்கும் முயற்சியாக, சிறப்பு கண்காட்சி முகாம் கடலூரில் நடைபெற்றது. இக்கண்காட்சியில், குப்பையில் வீசி எறியும் பொருட்களைக் கூட கலை நயத்துடன் கூடிய பொருளாக எப்படி மாற்ற முடியும் என்பது குறித்து செயல்விளக்கம் காட்டப்பட்டது.களிமண்ணால் சிற்பம் செய்யும் ஆற்றல் குழந்தைகளுக்கு இருக்க வேண்டியது அவசியம் என, களிமண் சிற்ப வடிவமைப்பாளர்களின் கருத்தாகும்.கலைநயமிக்க பொம்மைகள் செய்வது,  போட்டோ ஃபிரேம் செய்வது என, பல்வேறு செயல்களில் ஈடுபட்டால், ஆற்றல் பெருகும் என்பது மருத்துவர்களின் கருத்தாகும்.குழந்தைகள் கையில் செல்போன் கொடுப்பதை தவிர்த்து இது போன்ற கலைகளில் ஈடுபடுத்தினால் அவர்களின் எண்ணம் மேலோங்குவதுடன் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும் என்பது அனைவரின் நம்பிக்கை

Next Story

மேலும் செய்திகள்