பூந்தமல்லி அருகே முகவரி கேட்பது போல நடித்து செயினை பறிக்க முயற்சி - திருடனை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
பூந்தமல்லி அருகே முகவரி கேட்பது போல பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற நபரை அப்பகுதி மக்கள் அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பூந்தமல்லியை அடுத்த இந்திரா நகரை சேர்ந்த தனலெட்சுமி என்பவர் அருகில் உள்ள கடைக்கு சென்று திரும்பியபோது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் முகவரி கேட்பது போல பேசியுள்ளார். கத்தியை காட்டி மிரட்டி 5 சவரன் தங்க சங்கிலியை பறிக்க அந்த நபர் முயன்றுள்ளார். ஆனால் தனலெட்சுமி செயினை விடாமல் போராடிய நிலையில், அவரை கத்தியால் வெட்டியுள்ளார். கத்தி வெட்டு காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையில், திருடனுடன் தனலெட்சுமி போராடுவதை கண்ட அப்பகுதி இளைஞர்கள், மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர் சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்த சிவக்குமார் என்பது தெரிய வந்தது. இப்பகுதியில்,கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தவேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story