திருத்தணி முருகன் கோயிலில் 3 ஆம் நாள் தெப்ப உற்சவம் - கொட்டும் மழையில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் நேற்று 3-ஆம் நாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
திருத்தணி முருகன் கோயிலில் 3 ஆம் நாள் தெப்ப உற்சவம் - கொட்டும் மழையில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்
x
திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் நேற்று 3-ஆம் நாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. ஆடி கிருத்திகையை ஒட்டி,  நேற்று மாலை 6 மணியளவில், உற்சவர் முருகபெருமான் வள்ளி, தெய்வானை ஆகியோருடன் மலை அடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை வந்தடைந்தார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர் முருக பெருமானுக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து தெப்பத்தில் குளத்தை உலா வந்த முருக பெருமானை, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்