டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : 7 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : 7 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி
x
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது. இதில், காஞ்சி வீரன்ஸ் வீரர் சிலம்பரசன் ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர், 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காஞ்சி வீரன்ஸ் அணி, நேர்த்தியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. முடிவில் காஞ்சி வீரன்ஸ் அணி  19 ஒவர்களில் 3 விக்கெட் இழந்து141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்